/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்: உறியடி நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்பு
/
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்: உறியடி நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்பு
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்: உறியடி நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்பு
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்: உறியடி நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 27, 2024 02:24 AM

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி எஸ்.எஸ்., கோவில் வீதி விஷ்ணு பஜனை கோவிலில், கோகுலாஷ்டமி உறியடி உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, 7:15 மணிக்கு ஹோமம் மற்றும் அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ராதா கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை, 5:00 மணிக்கு பஜனைக்குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உறியடி உற்சவம், இரவு, 8:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
* பொள்ளாச்சி அருகே டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு, இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட அபிேஷக பொருட்களை கொண்டு அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து, மாலையில் பரதநாட்டிய நிகழ்ச்சியும், ராதை கிருஷ்ணர் வேமடணிந்த சிறுவர், சிறுமியர் நடன நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, உறியடி நிகழ்ச்சியும், நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியும் நடந்தது.
* ஆனைமலை அருகே ரமணமுதலிபுதுார் வெங்கடரமண பெருமாள் கோவிலில், பெருமாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, பஜனை, உறியடி நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* ஆனைமலை அருகே அங்கலகுறிச்சியில் உள்ள மலையில் அமைந்துள்ள நந்தகோபால்சாமி கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பாமா, ருக்மணியுடன் நந்தகோபால்சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, குழந்தைகள், ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து உறியடித்து வழிபாடு செய்தனர்.
உடுமலை
சின்னவாளவாடியில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. நேற்று கோகுலாஷ்டமி விழா கோவிலில் கொண்டாடப்பட்டது. காலை, 7:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனமும், சுவாமிக்கு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து பக்தி இன்னிசை மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. கோகுலாஷ்டமியையொட்டி உறியடி உற்சவம் நடந்தது. சுவாமிக்கு மங்கள ஆரத்தி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பல்வேறு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து சுவாமியை வழிபட்டனர். சோமவாரப்பட்டி கிராம மக்கள், ஸ்ரீ கிருஷ்ணன் வழிபாட்டு குழுவினர் உள்ளிட்டோர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* கரட்டுமடம் சஞ்சீவராய பெருமாள் கோவிலில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் நடந்த உறியடி நிகழ்ச்சியில், கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
* உடுமலை அருகேயுள்ள சாளையூரில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 61ம் ஆண்டு ஸ்தாபன தினம் துவக்கவிழா, 3ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் குழந்தைகளின் ஆன்மீக திருவீதி உலா நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடந்தது.
கோட்ட அமைப்பு செயலாளர் தேவசேனாதிபதி, மாநில பொருளார் கணேஷ்குமார், பாலசுப்ரமணியம், தேவராஜன், பூரணசந்திரன், ஜெகன் கார்த்திக், பா.ஜ., மாவட்ட செயலாளர் வடுகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கிருஷ்ணர், ராதை வேடமணிந்து, ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்கள். அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது.
நேற்று, உடுமலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 6ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நகராட்சி மண்டபத்தில் நடந்தது. மாலை, குழந்தைகள், கிருஷ்ணர், ராதை மற்றும் ஹிந்து கடவுளர்கள் வேடமணிந்து, பெரிய கடை வீதி நவநீதி கிருரஷ்ண பெருமாள் கோவிலிருந்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, உரியடி, சத்சங்கம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் பாலாஜி, சதீஷ்குமார், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வால்பாறை
வால்பாறை விஷ்வஹிந்த் பரிஷத் சார்பில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கிருஷ்ணஜெயந்தி விழாவிற்கு, ஒன்றிய செயலாளர் குட்டன்திருமேணி தலைமை வகித்தார். தலைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கிருஷ்ணர் சுவாமி படத்திற்கு மாலை அணிவித்து, பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். பின் நகரின் முக்கிய வீதி வழியாக குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தை பா.ஜ., மண்டல பார்வையாளர் தங்கவேல், நகரத்தலைவர் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.