/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.கே.என்.எம்.,ல் நீரிழிவு கால் பராமரிப்பு கிளினிக்
/
ஜி.கே.என்.எம்.,ல் நீரிழிவு கால் பராமரிப்பு கிளினிக்
ஜி.கே.என்.எம்.,ல் நீரிழிவு கால் பராமரிப்பு கிளினிக்
ஜி.கே.என்.எம்.,ல் நீரிழிவு கால் பராமரிப்பு கிளினிக்
ADDED : ஆக 25, 2024 01:10 AM

கோவை:ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில், நவீன வசதிகளை உள்ளடக்கிய நீரிழிவு கால் பராமரிப்பு சிகிச்சைக்கான, பிரத்யேக கிளினிக் துவங்கப்பட்டுள்ளது.
இந்த கிளினிக்கை, ஜி.கே.என்.எம். ஒருங்கிணைந்த புற நோயாளிகள் மருத்துவ மையத்தில், குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோபிநாத் திறந்து வைத்தார்.
மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறுகையில், '' நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் ஏற்படும், கால் புண் சார்ந்த பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை அளித்திட, இந்த கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே நோயினை கண்டறிதல், தடுப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் நவீன மருத்துவ வசதிகள் என அனைத்து சிறப்பம்சங்களும் இங்கு உள்ளது,'' என்றார்.
ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் மருத்துவ செயல் இயக்குனர் டாக்டர் சந்தோஷ் குமார் டோரா, நீரிழிவு நோய் டாக்டர் ஸ்ரீநிவாசன் மற்றும் நீரிழிவு கால் பராமரிப்பு சிகிச்சை டாக்டர் முத்துலட்சுமி பங்கேற்றனர்.