/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் பரவுகிறது வயிற்றுப்போக்கு :ஆய்வுக்கு தண்ணீர் மாதிரிகள் சேகரிப்பு

ADDED : ஜூலை 08, 2024 11:04 PM
கோவை;கோவையில் பரவி வரும் வயிற்றுப்போக்கு காரணமாக, தண்ணீர் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்காக சேகரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், வயிற்றுப்போக்கால் பொதுமக்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு சார்பில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
வயிற்றுப்போக்குக்கு, குடிநீர் தான் காரணமாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க மாவட்டம் முழுவதும் கிராமங்களில் உள்ள, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் மாதிரிகளை சேகரிப்பதற்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சேகரிக்கப்படும் குடிநீர் மாதிரிகளை, சோதனைக்கு உட்படுத்தி, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.