/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கஷ்டங்களை துணிச்சலுடன் சந்தித்தால் விலகி போய் விடும்'
/
'கஷ்டங்களை துணிச்சலுடன் சந்தித்தால் விலகி போய் விடும்'
'கஷ்டங்களை துணிச்சலுடன் சந்தித்தால் விலகி போய் விடும்'
'கஷ்டங்களை துணிச்சலுடன் சந்தித்தால் விலகி போய் விடும்'
ADDED : ஜூன் 02, 2024 12:06 AM
கோவை முத்தமிழ் அரங்கத்தின் வாராந்திர இலக்கிய சந்திப்பு கூட்டம், ரேஸ்கோர்ஸ் நடைபாதை சதுக்கத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த கோவை முத்தமிழ் அரங்க தலைவர் ராமசாமி பேசியதாவது:
இன்பமும், துன்பமும் இணைந்ததுதான் மனித வாழ்க்கை. இவை இரண்டும் இல்லாமல் வாழ்க்கையில்லை என்பதை தான், திருவள்ளுவர் தன் குறள் நெறி வழியாக உணர்த்துகிறார்.
மகிழ்ச்சியும், கவலையும் அவரவர் மனநிலையை பொறுத்தே அமைகிறது. இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும். 'குணப்படுத்த முடியாத நோய் வந்து விட்டால், சகித்துக் கொள்ள வேண்டும்' என்கிறது, ஒரு சீனப் பழமொழி.
கஷ்டங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டால், அது விரைவில் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். கவலை வரும் போது, நல்ல சிந்தனைகளில் மனதை செலுத்த வேண்டும். நல்ல இசையை கேட்டால் கவலை மறைந்து விடும். மனதை அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு.
இவ்வாறு, அவர் பேசினார்.
கவிஞர்கள் பலர், தங்களின் கவிதைகளை அரங்கில் வாசித்தனர். முத்தமிழ் அரங்க செயலாளர் ராஜேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

