/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காப்பீடு தொகை கிடைப்பதில் சிக்கல்; மின்வாரிய ஊழியர்கள் திண்டாட்டம்
/
காப்பீடு தொகை கிடைப்பதில் சிக்கல்; மின்வாரிய ஊழியர்கள் திண்டாட்டம்
காப்பீடு தொகை கிடைப்பதில் சிக்கல்; மின்வாரிய ஊழியர்கள் திண்டாட்டம்
காப்பீடு தொகை கிடைப்பதில் சிக்கல்; மின்வாரிய ஊழியர்கள் திண்டாட்டம்
ADDED : ஆக 02, 2024 05:24 AM
கோவை : மின்வாரிய ஊழியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, காப்பீடு தொகை முழுவதுமாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்வாரியத்தில் பணிபுரிபவர்களுக்கு, காப்பீடுக்கு என, மாதந்தோறும், 300 ரூபாய், மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியத்தில் இருந்து 497 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதற்காக, தமிழக மின்வாரியம் சார்பில், பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகிறது. ஆனால், மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, அறுவை சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே, குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும் என சொல்வதாக, ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தங்களின் மருத்துவ செலவுக்கு, இன்சூரன்ஸ் தொகை பயன்படும் என்றும், ஓய்வு பெற்றவர்களுக்கு, இது மிகுந்த உபயோகமாக இருக்கும் என்றும் நினைத்தோம். ஆனால், அறுவை சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே, 90 சதவீதம் தொகை கிடைக்கிறது. மற்ற சிகிச்சைகளுக்கு, 10 சதவீதம் தொகை மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
அப்போது, எதற்காக இத்தொகை பிடித்தம் செய்யப்படுகிறது என்று தெரியவில்லை. இதனால், நாங்கள் பல இடங்களில் கடன் வாங்கி அதை சமாளிக்க வேண்டியுள்ளது. புதிதாக ஓய்வு பெற்றவர்கள் பலருக்கு, கடந்த ஒரு வருட காலமாக, மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
எனவே, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் சிகிச்சைக்கான செலவை, தமிழக மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.