/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்கள் புனரமைப்பில் இழுபறி நிதி ஒதுக்காததால் சிக்கல்
/
கோவில்கள் புனரமைப்பில் இழுபறி நிதி ஒதுக்காததால் சிக்கல்
கோவில்கள் புனரமைப்பில் இழுபறி நிதி ஒதுக்காததால் சிக்கல்
கோவில்கள் புனரமைப்பில் இழுபறி நிதி ஒதுக்காததால் சிக்கல்
ADDED : ஏப் 18, 2024 04:05 AM
உடுமலை : குடிமங்கலம் பகுதியில், பழமையான கோவில்கள் அதிகளவு உள்ளன. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில்கள் போதிய பராமரிப்பின்றி, முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவில், கொழுமம் பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகளுக்காக, தொல்லியல் துறை வழிகாட்டுதல் பெற்று, புதிய நடைமுறையின் கீழ் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என ஹிந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
புதிய நடைமுறையால், கல்வெட்டுகள், பழங்கால சிற்பங்களுக்கு பாதிப்பும் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால், பழங்கால கோவில்கள் புதுப்பொலிவு பெறும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், ஹிந்து அறநிலையத்துறை அனுப்பிய கருத்துருவுக்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால், கோவில்கள் நிலை, பரிதாபமாக மாறி வருகிறது. பக்தர்கள் பங்களிப்புடன் சில கோவில்களில், பராமரிப்பு செய்தாலும், கும்பாபிேஷகம் செய்யப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
பழங்கால கோவில்களை பாதுகாக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

