டிஜிட்டல் நுாலக மேலாண்மை அமைப்பு: பள்ளியில் துவக்கம்
டிஜிட்டல் நுாலக மேலாண்மை அமைப்பு: பள்ளியில் துவக்கம்
ADDED : ஆக 05, 2026 06:52 PM
சூலுார்: சூலுார் கேந்திரிய பள்ளியில், டிஜிட்டல் நுாலக மேலாண்மை அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சூலுார் விமானப்படைத்தள அருகே உள்ள கேந்திரிய வித்யாலயாவில், டிஜிட்டல் நுாலக மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா சங்கதன் கட்டமைப்பில், மாணவர்களை மையமாக கொண்ட, முதல் டிஜிட்டல் நுாலக மேலாண்மை அமைப்பு இதுவாகும். நுாலகர் ஐஸ்வர்யா வழிகாட்டுதலுடன், பிளஸ் 1 மாணவர் தனிஷ் வெற்றிவேலால், டிஜிட்டல் நுாலக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் ராகேஷ் குமார் மிஷ்ரா, துணை முதல்வர் தமிழரசன், தலைமையாசிரியை ராதா வெங்கடேஷன் ஆகியோர், டிஜிட்டல் நுாலக மேலாண்மை அமைப்பின் அதிகாரப்பூர்வ தளத்தை துவக்கி வைத்தனர்.
புத்தகங்களை வழங்குதல், பெறுதல் மற்றும் புதுப்பித்தல் அனைத்தும் ஒரே ‘கிளிக்’ வாயிலாக மேற்கொள்ள முடியும். வாசிப்பு கலந்துரையாடல், விளையாட்டு வழி கற்றல், வினாடி–-வினாக்கள், ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்பாடு உட்பட பல சிறப்புகள், இந்த டிஜிட்டல் நுாலக மேலாண்மை அமைப்பில் உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.
