/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருள் சூழ்ந்த பாலத்தில் திக்திக்... பயணம்! வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
/
இருள் சூழ்ந்த பாலத்தில் திக்திக்... பயணம்! வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
இருள் சூழ்ந்த பாலத்தில் திக்திக்... பயணம்! வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
இருள் சூழ்ந்த பாலத்தில் திக்திக்... பயணம்! வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ADDED : செப் 04, 2024 01:41 AM

பொள்ளாச்சி;பலமுறை கோரிக்கை விடுத்தும் இருள் சூழ்ந்த பாலத்தில், மின்விளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே,சி.டி.சி., காலனி, ராம் நகர், கோட்டூர் ரோடு செல்ல வசதியாக, சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டது. இப்பகுதி குடியிருப்பு மக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட பாலம் பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்து காணப்பட்டது.
இவ்வழியாக செல்லும் மக்கள் கோரிக்கை விடுத்ததால், மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. அவற்றை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்துவது, எடுத்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
அதன்பின், மின்விளக்குகள் அமைத்து பராமரிக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லும் நிலை உள்ளது.
இங்கு போதிய மின் விளக்கு வசதி ஏற்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
சுரங்க பாலம் இரவு மட்டுமல்ல காலையிலும், இருள் சூழ்ந்த நிலையிலேயே உள்ளது. பாதசாரிகள் இவ்வழியாக செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது. இருளாக இருப்பதால், சமூக விரோத செயல்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றன.
மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள் தனியாக செல்ல முடியாத நிலை உள்ளது. நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கவும் அதிகளவு வாய்ப்புள்ளது. இங்கு, மின்விளக்குகள் வசதி ஏற்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.
இப்பகுதி வழியாக குடியிருப்புக்கு செல்லும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.