/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்: தேசபக்திக்கோட்டை புகைப்பட கண்காட்சி
/
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்: தேசபக்திக்கோட்டை புகைப்பட கண்காட்சி
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்: தேசபக்திக்கோட்டை புகைப்பட கண்காட்சி
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்: தேசபக்திக்கோட்டை புகைப்பட கண்காட்சி
ADDED : ஆக 16, 2024 03:28 AM

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவின் ஒரு பகுதியாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'ஜெய்ஹிந்த் பவுண்டேஷன்' சார்பில் 'தேசபக்திக்கோட்டை' என்ற புகைப்பட கண்காட்சி நடந்தது.
நாட்டின், 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், நாட்டு விடுதலைக்காக போராடி உயர்நீத்த, 85 சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சி அரங்கை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி திறந்து வைத்தார். ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் நந்தகுமார், இ.பி.ஜி., பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் பிந்து, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த ஜமாத் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் உடன் இருந்தனர். புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட ஆயிரக்கணக்கான பார்வையாளர்களிடம் சுதந்திர தினம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. சரியாக பதில் அளித்த 78 பேருக்கு, தியாகிகளின் 'போட்டோ பிரேம்' நினைவு பரிசாக வழங்கப்பட்டன.