ADDED : ஜூலை 01, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மறியல் போராட்டம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்தது.
தாலுகா செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், போராட்டத்தை துவக்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைசாமி, நிர்வாகிகள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய விக்கித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜிவிகா மிஷன் (கிராமின்) சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை சட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும். கிராமப்புற மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட, 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
