ADDED : ஜூலை 01, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
புலியகுளம்: உப்பிலிபாளையத்திலிருந்து க.க.சாவடி வரை எஸ் 2 கோகுலம் என்ற டவுன் பஸ் இயங்குகிறது. இதேபோல், சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ.,மருத்துவமனையிலிருந்து உப்பிலிபாளையம், பேரூர், வழியாக தீத்திபாளையம் வரை எஸ் 3 என்ற பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன் தினம் நேர பிரச்னை காரணமாக புலியகுளம் – சவுரிபாளையம் இடையே பஸ்சை குறுக்கே நிறுத்தி, எஸ்.3 பஸ்சை நகர விடாமல் செய்து கண்டக்டர், டிரைவர்கள் ரகளை செய்தனர்.
அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
