/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓடாமல் தேங்குது கழிவுநீர் சுகாதார பாதிப்பால் அதிருப்தி
/
ஓடாமல் தேங்குது கழிவுநீர் சுகாதார பாதிப்பால் அதிருப்தி
ஓடாமல் தேங்குது கழிவுநீர் சுகாதார பாதிப்பால் அதிருப்தி
ஓடாமல் தேங்குது கழிவுநீர் சுகாதார பாதிப்பால் அதிருப்தி
ADDED : ஏப் 11, 2024 06:54 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி - பல்லடம் ரோடு வழியாக, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், கிராமப்புறங்களுக்கும் செல்லும் பஸ்களும் அதிகளவு சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு, தற்போது தான் விரிவாக்கம் செய்யப்பட்டு, மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணி முழுவதுமாக முடிக்கப்படாமல் உள்ளதால், கழிவுநீர் தேங்கி நின்று சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: பல்லடம் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு வடிகால் அமைக்கப்பட்டது. பல்லடம் ரோடு பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வரும் கழிவுநீர், வடிகால் வழியாக வெளியேறுகிறது.
அதில், மகாலிங்கபுரம் சந்திப்பு பகுதி அருகே, டி.கோட்டாம்பட்டி செல்லும் இணைப்புச்சாலை அருகே வடிகால் பணி பாதியில் நிற்கிறது. இதனால், அங்கு குட்டை போன்று கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில், மழைநீருடன் கலந்து ரோட்டில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
கழிவுநீர் தேங்காமல் மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லும் வகையில், தரைமட்ட பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்தை பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

