/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் பிரச்னைக்கு தீர்வில்லை நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
/
குடிநீர் பிரச்னைக்கு தீர்வில்லை நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
குடிநீர் பிரச்னைக்கு தீர்வில்லை நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
குடிநீர் பிரச்னைக்கு தீர்வில்லை நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
ADDED : செப் 07, 2024 02:49 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சிக்கு ஆழியாறு பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது.
ஒரு மாதத்தில், இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். குழாயில் குறைந்த அளவே குடிநீர் வருவதால், பற்றாக்குறை நிலவுகிறது.
இது பற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால், ஆழியாறில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது என, கூறுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
குடிநீர் பிரச்னை அதிகரிப்பால், சிலர் விலைக்கு குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று, நா.மூ.சுங்கம், வேடசந்தூர் பகுதியிலும் பிரச்னை உள்ளது. இதனால், மக்கள் பலர் அதிகளவு பாதிக்கின்றனர். சில நேரத்தில், அழியாறு பகுதியில் குழாய் உடைப்பு என, பொய்யான காரணம் கூறி, குடிநீர் விநியோகம் செய்வதை தவிர்க்கின்றனர். சில நேரத்தில் முழுமையாக ஒரு மணி நேரம் கூட குடிநீர் வினியோகிப்பதில்லை.
இதனால், மக்கள் பலர் ஒன்றிணைந்து மறியலில் ஈடுப்படோம். பல முறை அதிகாரிகளிடமும் தெரிவித்தோம். ஆனால், இது வரை குடிநீர் வினியோகம் சீராகவில்லை. இப்பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் கள ஆய்வு செய்து, பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.