/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடையில் காலி பாட்டிலுக்கு பணம் கொடுக்காததால் அதிருப்தி
/
மதுக்கடையில் காலி பாட்டிலுக்கு பணம் கொடுக்காததால் அதிருப்தி
மதுக்கடையில் காலி பாட்டிலுக்கு பணம் கொடுக்காததால் அதிருப்தி
மதுக்கடையில் காலி பாட்டிலுக்கு பணம் கொடுக்காததால் அதிருப்தி
ADDED : மே 06, 2024 10:35 PM
நெகமம்;நெகமம், காட்டம்பட்டி டாஸ்மாக் மதுகடையில் காலி மது பாட்டிலுக்கு, பணம் கொடுக்காததால் 'குடி'மகன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காட்டம்பட்டி டாஸ்மாக் மதுபானக்கடையில் ஏராளமானோர் மது வாங்கி செல்கின்றனர். சிலர் காலி மது பாட்டிலை, மதுக்கடையில் கொடுத்து, 10 ரூபாய் திரும்ப பெறுகின்றனர்.
தற்போது, காட்டம்பட்டியில் உள்ள மதுக்கடையில், காலி மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் வழங்குவதில்லை. இதற்கு மாற்றாக, 'சைடிஷ்' வாங்க மது குடிப்பவர்களிடம் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் 'குடி'மகன்கள் அதிருப்தியடைந்து, மதுக்கடை ஊழியர்களிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
'குடி'மகன்கள் கூறியதாவது:
காட்டம்பட்டி மதுக்கடையில், காலி பாட்டிலை கொடுத்தால் வாங்குவது இல்லை. இதற்கு மாறாக பாரில் கொடுக்கும் படி, டாஸ்மாக் கடை பணியாளர் கூறுகின்றார். பாரில் கொடுத்தால், 10 ரூபாய்க்கு பதிலாக, 'சைடிஷ்' மட்டும் வழங்குகிறார்கள். பணம் கேட்டால் தர மறுக்கின்றனர். இதையும் மீறி கேட்டால், 'பணம் குடுக்க முடியாது' என கறாராக பேசுகின்றனர்.
மொத்தமாக நான்கு அல்லது ஐந்து பாட்டில் கொடுத்தாலும், சரக்கு மட்டுமே வாங்க முடியும் பணம் திரும்ப கொடுக்க முடியாது என்கின்றனர். இதை டாஸ்மாக் நிர்வாகம் கவனித்து காலி பாட்டிலுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.