தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட கலெக்டர் ஆய்வு பணி நிறைவு

மாவட்ட கலெக்டர் ஆய்வு பணி நிறைவு

மாவட்ட கலெக்டர் ஆய்வு பணி நிறைவு


ADDED : ஜூலை 26, 2026 02:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு பணி நிறைவடைந்தது.

கிணத்துக்கடவு பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில், 24 மற்றும் 25ம் தேதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் வாயிலாக, மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 24ம் தேதி, கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி, பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, 25ம் தேதியன்று, வரதனுார் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். குப்பை தரம் பிரிக்கும் முறை, குப்பை சேகரிப்பு உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.

மேலும், கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவுகள் குறித்து கேட்டறிந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us