/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட ஹேண்ட்பால் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல் வெற்றி
/
மாவட்ட ஹேண்ட்பால் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல் வெற்றி
மாவட்ட ஹேண்ட்பால் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல் வெற்றி
மாவட்ட ஹேண்ட்பால் போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல் வெற்றி
ADDED : ஆக 13, 2024 12:46 AM
கோவை;பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டியில், மாணவர்கள் அபாரமாக விளையாடி அசத்தினர்.
பி.பி.ஜி., நர்சிங் கல்லுாரியின் உடற்கல்வித்துறை, கோவை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில், 'ஹேண்ட்பால் பெஸ்ட் 2024' என்ற மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி, சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி., கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
போட்டியை, பி.பி.ஜி., குழும துணை தலைவர் அக்சய், செயல் இயக்குனர் அமுதகுமார், கோவை மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் ஜான் சிங்கராயர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 35 பள்ளி அணிகள் பங்கேற்றன. மாணவ - மாணவியருக்கு 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவர் 19 வயது பிரிவில், அரை இறுதியில் நேஷனல் மாடல் பள்ளி 17 - 10 என்ற கோல் கணக்கில், நிர்மல மாதா பள்ளியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டியில் ஜி.கே.டி., பள்ளி அணி, 18 - 11 என்ற கோல் கணக்கில் நேஷனல் மாடல் பள்ளியை வீழ்த்தியது. அதன்படி, முதல் இடத்தை ஜி.கே.டி., பள்ளியும், இரண்டாவது இடத்தை நேஷனல் மாடல் பள்ளியும், மூன்றாவது இடத்தை நிர்மல மாதா பள்ளியும் பிடித்தது.
மாணவியர் 19 வயது பிரிவு அரை இறுதியில், கோபால் நாயுடு பள்ளி 7 - 5 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளியையும், ஜி.கே.டி., பள்ளி அணி 10 - 6 என்ற கோல் கணக்கில் ஏ.ஆர்.சி., பள்ளியையும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டியில் ஜி.கே.டி., பள்ளி அணி, 7 - 1 என்ற கோல் கணக்கில் கோபால் நாயுடு பள்ளி அணியை வீழ்த்தியது. அதன்படி முதல் இடத்தை ஜி.கே.டி., பள்ளியும், இரண்டாவது இடத்தை நேஷனல் மாடல் பள்ளியும், மூன்றாவது இடத்தை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளியும், நான்காவது இடத்தை ஏ.ஆர்.சி., பள்ளியும் பிடித்தது.
மாணவர் 17 வயது பிரிவில் அரை இறுதியில், நேஷனல் மாடல் பள்ளி 8 - 3 என்ற கோல் கணக்கில் ஜி.கே.டி., பள்ளியையும், ஏ.ஆர்.சி., பள்ளி அணி 14 - 12 என்ற கோல் கணக்கில் பாரதி வித்யா பவன் பள்ளியையும் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டியில் நேஷனல் மாடல் பள்ளி 13 - 10 என்ற கோல் கணக்கில் ஏ.ஆர்.சி., பள்ளி அணியை வீழ்த்தியது. அதன்படி முதல் இடத்தை நேஷனல் மாடல் பள்ளியும், இரண்டாவது இடத்தை ஏ.ஆர்.சி., பள்ளியும், மூன்றாவது இடத்தை பாரதி வித்யா பவன் பள்ளியும், நான்காவது இடத்தை ஜி.கே.டி., பள்ளியும் பிடித்தது.
மாணவியர் 17 வயது பிரிவில் அரை இறுதியில் ஜி.கே.டி., பள்ளி 7 - 3 என்ற கோல் கணக்கில் நேஷனல் மாடல் பள்ளியையும், சாவரா பள்ளி அணி 9 - 1 என்ற கோல் கணக்கில் ஆர்.கே.வி., பள்ளியையும் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டியில் சாவரா பள்ளி, 6 - 5 என்ற கோல் கணக்கில் ஜி.கே.டி., பள்ளி அணியை வீழ்த்தியது. அதன்படி முதல் இடத்தை சாவரா பள்ளியும், இரண்டாவது இடத்தை ஜி.கே.டி., பள்ளியும், மூன்றாவது இடத்தை நேஷனல் மாடல் பள்ளியும், நான்காவது இடத்தை ஆர்.கே.வி., பள்ளியும் பிடித்தது.
இதில் சிறப்பு விருந்தினராக, பி.பி.ஜி., தலைவர் தங்கவேல், பி.பி.ஜி., பள்ளி இயக்குனர் வித்யா, நிர்வாக அதிகாரி தட்சிணாமூர்த்தி, உடற்கல்வி இயக்குனர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

