/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட ஸ்கேட்டிங்: வித்ய நேத்ரா பள்ளி வெற்றி
/
மாவட்ட ஸ்கேட்டிங்: வித்ய நேத்ரா பள்ளி வெற்றி
ADDED : ஆக 29, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வித்ய நேத்ரா மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஸ்கேட்டர்ஸ் மற்றும் ஸ்கேட்டிங் கோச்சர்ஸ் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவில் ஸ்கேட்டிங் போட்டி பல்லடத்தில் நடந்தது.
இப்போட்டியில் கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் பள்ளியின் சார்பில், 15 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும், மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.