/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவள்ளுவர் திடலில் கோட்ட பொறியாளர் ஆய்வு
/
திருவள்ளுவர் திடலில் கோட்ட பொறியாளர் ஆய்வு
ADDED : ஆக 06, 2024 10:00 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 'ரவுண்டானா' அமைக்கும் பணிகளை, கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 'ரவுண்டானா' அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்தனர். அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, மூன்று கோடி ரூபாய் செலவில், திருவள்ளுவர் திடல் சந்திப்பு, மார்க்கெட் ரோடு சந்திப்பு ஆகியவை விரிவாக்கம் செய்து மேம்பாடு செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடக்கின்றன.
இப்பணிகளை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திடவும் அறிவுரை வழங்கினார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.