/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க., அரசு தவறிவிட்டது'
/
'வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க., அரசு தவறிவிட்டது'
'வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க., அரசு தவறிவிட்டது'
'வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க., அரசு தவறிவிட்டது'
ADDED : செப் 11, 2024 12:27 AM

கோவை;'தி.மு.க., அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' என, 'டிட்டோ ஜாக்' குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர்(டிட்டோஜாக்), 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும், கோஷங்கள் எழுப்பினர்.
'டிட்டோஜாக்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி கூறுகையில், ''பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய, மாநில முன்னுரிமையை கொண்டு வந்துள்ள அரசாணை, 243ஐ ரத்து செய்ய வேண்டும்.
புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை, மீண்டும் வழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை,'' என்றார்.

