தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க. வினர் மறியல்

தி.மு.க. வினர் மறியல்

தி.மு.க. வினர் மறியல்


ADDED : ஆக 04, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர், ஆக. 5 -–

தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றுக்காலை உதயநிதி கைது செய்யப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க., வினர், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் தலைமையில் திருச்சி ரோட்டில் மறியல் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே தி.மு.க.,வினர், வடக்கு நகர செயலாளர் அஸ்ரப் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தி.மு.க.,வினர் முதல்வர் விஜயின் உருவ பொம்மையை எரிக்க எடுத்து வந்தனர். இதைப் பார்த்த போலீசார் உருவ பொம்மையை பிடுங்கிச் சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அன்னூரில் தி.மு.க.,வினர் கைகாட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட தி.மு.க., வினர் 47 பேரை இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

காரமடையில் பஸ் ஸ்டாண்ட் அருகே தி.மு.க., நகர செயலாளர் குருபிரசாத் தலைமையில், தெற்கு ஒன்றிய செயலாளர் பிரதீப் முன்னிலையில், தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்து தனியார் திருமணம் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

---

----––––––

-

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சை கண்டித்து சூலூரில் த.வெ.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறிது நேரத்தில் உதயநிதி கைதை கண்டித்து , தி.மு.க., மறியல் செய்தனர்.

தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றுக்காலை உதயநிதி கைது செய்யப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க., வினர், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் தலைமையில் திருச்சி ரோட்டில் மறியல் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, தவெ.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.

சூலூர் பேரூராட்சி அலுவலகம் முன், சூலூர் எம்.எல்.ஏ., சுகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆபாசமாக பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி பதவி விலக வேண்டும், என, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முதல்வர், அமைச்சர்களை, பெண்களை தொடர்ந்து இழிவாக பேசி வருவது கண்டிக்கதக்கது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், எம்.எல்.ஏ., சுகுமார் கூறினார். முன்னதாக, உதயநிதி மீது புகார் மனு போலீசாரிடம் அளிக்கப்பட்டது.

தி.மு.க., வினர் மறியல்:

த.வெ.க., ஆர்ப்பாட்டம் முடிந்த நிலையில், உதயநிதி கைது செய்யப்பட்ட

இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க., வினர், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் தலைமையில் திருச்சி ரோட்டில் மறியல் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் மன்னவன், அன்பரசு, செந்தில்குமார் மற்றும் 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us