/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழுதான மின்சாதனங்களை உபயோகிக்காதீங்க! மின்வாரியம் அறிவுறுத்தல்
/
பழுதான மின்சாதனங்களை உபயோகிக்காதீங்க! மின்வாரியம் அறிவுறுத்தல்
பழுதான மின்சாதனங்களை உபயோகிக்காதீங்க! மின்வாரியம் அறிவுறுத்தல்
பழுதான மின்சாதனங்களை உபயோகிக்காதீங்க! மின்வாரியம் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2024 12:33 AM
பொள்ளாச்சி:பழுதான மின்சாதனங்களை உபயோகிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேசிய மின்சார நாள் ஜூன் 26ம் தேதியும், மின்சார பாதுகாப்பு வாரம் ஜூன் 26 முதல் ஜூலை 2ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் பாதுகாப்பு பள்ளியில் இருந்து துவங்குகிறது என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள், மின் ஒப்பந்ததாரர் வாயிலாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான ஒயர்கள், மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை 'ஆப்' செய்ய வேண்டும். ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் வாயிலாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்க கூடாது. கேபிள் டி.வி., ஒயர்களை மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல கூடாது.
ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன், அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயரின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது, கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலைத் தவிர்க்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.