/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டொக்... டொக்... பிரிட்ஜுக்குள்ள என்ன இருக்கு? 100 சதவீதம் டிரை செய்யும் வாஷிங்மெஷின் பாரு!
/
டொக்... டொக்... பிரிட்ஜுக்குள்ள என்ன இருக்கு? 100 சதவீதம் டிரை செய்யும் வாஷிங்மெஷின் பாரு!
டொக்... டொக்... பிரிட்ஜுக்குள்ள என்ன இருக்கு? 100 சதவீதம் டிரை செய்யும் வாஷிங்மெஷின் பாரு!
டொக்... டொக்... பிரிட்ஜுக்குள்ள என்ன இருக்கு? 100 சதவீதம் டிரை செய்யும் வாஷிங்மெஷின் பாரு!
ADDED : ஆக 16, 2024 03:20 AM

புத்தம் புதிய வரவுகளை உடனுக்குடன் அறிமுகம் செய்யும் சத்யா நிறுவனம், இம்முறை அறிமுகம் செய்திருப்பது எல்.ஜி., 'மூடி ரெப்ரிஜிரேட்டர்'. சைடு பை சைடு கதவுகளுடன் 650 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பிரிட்ஜ் கண்ணாடி கதவை டொக் டொக்... என தட்டினால், கதவைத் திறக்காமலேயே உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன எனப் பார்க்க முடியும். இந்த பிரிஜ்ஜில் புளூ டூத் வசதியும் உண்டு.
நமது விருப்பத்துக்கேற்ப 18 வண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியும். இது பிரீமியம் மாடல். நடுத்தர பட்ஜெட்டில் எதிர்பார்ப்பவர்களுக்கும் சைடு பை சைடு மாடலில் பிரிட்ஜ் உண்டு.
'வாஷ் டவர்': வாஷிங் மெஷினில் புதுவரவு 'வாஷ் டவர்'. கீழே வாஷர், மேலே டிரையர் கொண்ட நவீன மாடல். கொட்டும் அடைமழைக் காலத்தில் கூட துணிகளை உலர வைக்க இனி சிரமம் தேவையில்லை. துணி துவைத்து முடித்ததும், டிரையரில் போட்டால், 100 சதவீதம் காய வைத்துக் கொடுத்து விடும். பாக்டீரியா இன்றி சுத்தமான ஆடைகளை அப்படியே எடுத்து மடித்து வைக்கலாம். டிரையரை மட்டும் தனியாக பயன்படுத்தும் வசதியும் உண்டு.
இந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் இந்த இரண்டையும் நீங்கள் எந்த ஷோரூமிலும் பார்க்க முடியாது. 'தினமலர்' கண்காட்சியில் மட்டுமே உங்களுக்காக ஸ்பெஷலாக வைக்கப்பட்டுள்ளது. சத்யாவின் கண்காட்சி ஆபராக, 48 சதவீத தள்ளுபடி விலையில், 55 அங்குல ஓ.எல்.இ.டி., 'டிவி', 1.5 டன் பிராண்டட் இன்வர்ட்டர் 3 ஸ்டார் ஏ.சி., 32 ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கிறது. அனைத்து ரக மொபைல், மிக்ஸி, மைக்ரோ ஓவன், ஸ்டவ் என அனைத்து கிச்சன் சாதனங்களுக்கும் சிறப்புத் தள்ளுபடி, மாதத் தவணைத் திட்டங்கள் உண்டு. பொருள் வாங்கும் அனைவருக்கும் நிச்சயப் பரிசும் உண்டு.

