ADDED : ஜூலை 26, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
வெள்ளக்கிணறு: மாநகராட்சி சார்பில் வெள்ளக்கிணறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார். ரேபிஸ் தடுப்பூசி முகாமும் நடந்தது. 810 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் நோயை ஒழிப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தன்னார்வலர்களுடன் இணைந்து நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் வேலை நடக்கிறது. தடுப்பூசி செலுத்திய நாய்களின் விபரங்களை அறிய, ‘ஜியோ டேகிங்’ முறையில் கண்காணிப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பவன்குமார், கமிஷனர் ரவி தேஜா, மேயர் ரங்கநாயகி, எம்.எல்.ஏ கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
