/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமர் கோவில் சார்பில் அன்னதானம்
/
ராமர் கோவில் சார்பில் அன்னதானம்
ADDED : ஆக 14, 2024 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ராம்நகரிலுள்ள கோதண்டராமர் கோவில் சார்பில் நேற்று, அசோகாபிரேமா திருமணமண்டபத்தில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
கோதண்டராமர் கோவில் சார்பில், கடந்த மூன்று மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற வார நாட்களில், அன்றாடம் மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
95வது நாளான நேற்று, மூன்று வகையான உணவுகள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் கோவில் சார்பில் வழங்கப்பட்ட அன்னதான உணவை வாங்கி உண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம், செயலாளர் விஸ்வநாதன் செய்திருந்தனர்.