தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அந்நியர்களிடம் தேவையற்ற தகவல்களை பகிர வேண்டாம்

அந்நியர்களிடம் தேவையற்ற தகவல்களை பகிர வேண்டாம்

அந்நியர்களிடம் தேவையற்ற தகவல்களை பகிர வேண்டாம்


ADDED : ஜூன் 30, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: ‘அந்நியர்களிடம் தேவையற்ற தகவல்களை பகிர வேண்டாம்’ என, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ, பெண் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே போலீசாரும்,சிங்கப்பெண் காவலரும் இணைந்து, ரயில் பெட்டியில், பெண் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கோவை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது: பெண்கள் தன்னம்பிக்கையுடனும், அச்சமின்றியும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும். பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத அந்நியர்களிடம் தேவையற்ற தகவல்களை பகிர்ந்து கொள்ள கூடாது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரயில் பெட்டியில் உள்ள அவசர உதவி எண்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு இன்ஸ்பெக்டர் பேசினார்.

சிங்கப்பெண் காவலர் சப்- இன்ஸ்பெக்டர் பேபி, காவலர்கள் பவித்ரா, அனிதா ஆகியோர், ‘பெண்கள் தங்களை தாங்களே, பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றனர். பெண் பயணிகள் கேட்ட கேள்விகளுக்கு, சிங்கப்பெண் காவலர்கள் பதில் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us