/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வீடு, வீடாக ஆய்வு
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வீடு, வீடாக ஆய்வு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வீடு, வீடாக ஆய்வு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வீடு, வீடாக ஆய்வு
ADDED : டிச 07, 2024 05:58 AM
பெ.நா.பாளையம்; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் குறித்து ஆய்வு செய்ய வீடு, வீடாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அதில், 31 லட்சம் வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும், 2025 ஜன., 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
ஏற்கனவே ஓட்டளித்த மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தன. கடந்த, 16 மற்றும், 17ம் தேதிகளில் நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய, 42 ஆயிரம் பேர் விண்ணப்ப படிவங்கள் அளித்து இருந்தனர்.
இதே போல, 23, 24 தேதிகளில் நடந்த சிறப்பு முகாமில் இளம் வாக்காளர்கள் பலர் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். மொத்தம் நான்கு நாட்கள் நடந்த இந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கோரி, 43,166 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பெயர் நீக்கம் செய்ய, 10,848 பேரும், பிழைகள் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய, 38,625 பேர் என மொத்தம் 92,589 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இது தவிர 'ஆன்லைன்' வாயிலாக, 16,961 பேர் விண்ணப்ப படிவம் அளித்திருந்தனர்.
வாக்காளர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் பணியில், கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து விண்ணப்பித்தவர்கள் வசிக்கின்ற பகுதி, அவர்களுடைய ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு வீடு, வீடாக ஆய்வு நடத்தி பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகிய பணிகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வு பணிகள் இம்மாதம், 28ம் தேதி வரை நடக்கும் என்றனர்.