டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரியின் 15வது பட்டமளிப்பு விழா
டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரியின் 15வது பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 01, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
கோவை: டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லுாரியின் 15வது பட்டமளிப்பு விழா, கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினர் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் பேசுகையில், ‘‘சுய வளர்ச்சியுடன், சமூக முன்னேற்றத்திற்கும் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்,’’ என்றார்.
தொடர்ந்து 576 இளநிலை மற்றும் 254 முதுநிலை என மொத்தம் 830 மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லுாரி செயலாளர் டாக்டர் அருண், அறங்காவலர் மதுரா, தலைமை செயல் அதிகாரி புவனேஸ்வரன், முதல்வர் பிரபா பங்கேற்றனர்.
