/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரைவு வழிகாட்டி பதிவேடு வகைப்பாடு ஒப்புதல் கூட்டம்
/
வரைவு வழிகாட்டி பதிவேடு வகைப்பாடு ஒப்புதல் கூட்டம்
வரைவு வழிகாட்டி பதிவேடு வகைப்பாடு ஒப்புதல் கூட்டம்
வரைவு வழிகாட்டி பதிவேடு வகைப்பாடு ஒப்புதல் கூட்டம்
ADDED : மே 24, 2024 01:07 AM
கோவை;கோவை மாவட்டத்துக்கான வரைவு வழிகாட்டி பதிவேடு வகைப்பாடுகள் ஒப்புதல் வழங்குதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
கோவை மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில், கோவை வடக்கில் எட்டு சார் பதிவாளர் அலுவலகங்களின்கீழ், 103 கிராமங்களும், தெற்கில், 9 அலுவலகங்களின்கீழ், 190, திருப்பூரில் மூன்று அலுவலகங்களின்கீழ், 25, கோபியில் ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தின்கீழ் ஆறு கிராமங்களும் உள்ளன.
இவற்றுக்கு அரசாணை நெறிமுறைகளின்படி மைய மதிப்பீட்டு குழுவால் வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில், வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டது. இட ஆய்வு, பொது மக்களிடம் விசாரணை, வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் தேவையான புள்ளி விபரங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, வரைவு வழிகாட்டி பதிவேடுகள் தயாரிக்கப்பட்டன.
சார் பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட கிராமங்களின் தொகுப்பு பட்டியல், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சொத்துக்கள், அவற்றின் வகைப்பாடு வாரியாக தொகுத்து மாவட்ட துணை குழுவின் பரிசீலனைக்கு பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டது.
பதிவுத்துறை சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில், துணை பதிவுத்துறை தலைவர் பிரபாகர், மாவட்ட பதிவாளர்கள் கரீம் ராஜா, பிரபாவதி, ஜெயபிரகாஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.