/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப் பொருள் இல்லாத வளாகத்தை ஏற்படுத்த ஓட்டம்
/
போதைப் பொருள் இல்லாத வளாகத்தை ஏற்படுத்த ஓட்டம்
ADDED : ஆக 28, 2024 11:37 PM
கோவை : போதைப் பொருட்கள் இல்லாத வளாகத்தை ஏற்படுத்த, தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில், விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில், கல்லுாரி மாணவர்களிடையே போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், போதைப் பொருள் இல்லாத வளாகம் - 2024, போதைப் பொருள் வேண்டாம், வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்லுங்கள் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு வரும், 31 ம் தேதி, 5 கி.மீ., ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
காலை, 6:30 மணிக்கு கோவை ரேஸ்கோர்ஸில் துவங்கும் ஓட்டம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில் நிறைவடைகிறது. அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். பதிவு கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக, ரூ.7,500, மூன்றாம் பரிசாக, ரூ.2,500 வழங்கப்படுகிறது.
பங்கேற்பவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், டி-சர்ட் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 87546 31586, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

