/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிக்கியது போதைப்பொருள் 'நெட்வொர்க்'; ரூ.6 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளுடன் 9 பேர் கைது

ADDED : மார் 04, 2025 07:29 AM

கோவை; கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஐ.டி., ஊழியர்களுக்கு, மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த, கேரளாவை சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஒன்பது பேரை, கோவை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிப்., 27ல்,ரேஸ்கோர்ஸ் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மெத்தபெட்டமைன் விற்பனை செய்த நீலகிரியை சேர்ந்த மிதுன்ராஜ், 27 என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து, 7 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் உடுமலையை சேர்ந்த ஜெகநாதன், 30, மற்றும் கோவை காளப்பட்டியை சேர்ந்த கோகுல், 28, ஆகியோருடன் சேர்ந்து, கோவையில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து ஜெகநாதன், கோகுல் ஆகியோரின் இருப்பிடம் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 10 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களின் தகவல்படி, பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமைன் சப்ளை செய்யும்,கேரள மாநிலத்தை சேர்ந்த அஸ்வின், 25, ரியாஸ், 32, அமல், 24, அப்துல் சலீம், 46, அன்சாத், 23 மற்றும் நீலகிரியை சேர்ந்த அசாருதீன், 28 ஆகிய ஐந்து பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 53 கிராம் மெத்தபெட்டமைன்,20 எல்.எஸ்.டி., ஸ்டாம்ப், கார், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.