/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வறண்ட வானிலை எதிர்பார்ப்பு வேளாண் பல்கலை கணிப்பு
/
வறண்ட வானிலை எதிர்பார்ப்பு வேளாண் பல்கலை கணிப்பு
ADDED : மார் 28, 2024 05:01 AM
பொள்ளாச்சி, : நிலவும் வறண்ட வானிலை கருத்தில் கொண்டு, ஏப்., முதல் வாரத்தில் இறவை கம்பு விதைப்பிற்காக நிலம் தயார் செய்ய விவசாயிகளுக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த ஐந்து நாட்களுக்கு, வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம்,80 சதவீதமும் மாலை நேர ஈரப்பதம்,20 சதவீதமாகவும் இருக்கும்.
வெப்பநிலை சற்று உயர்ந்து வருவதால், காய்கறிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் காணப்படுகிறது. இதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பகல், இரவு நேர வெப்பநிலை உயர்ந்தும், காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால், மதியம்,2:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, 5 மாத வயதுடைய வாழை மரங்களுக்கு, முட்டு கொடுக்க வேண்டும். ரோஜா தோட்டத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க, பயிர் மூடாக்கு செய்யலாம்.