/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலின் தாக்கத்தால் வாழை இலை வரத்து குறைவு
/
வெயிலின் தாக்கத்தால் வாழை இலை வரத்து குறைவு
ADDED : மே 05, 2024 11:25 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாழை இலை ஏலம் வாரம்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஏலம் நடக்கிறது.
கடந்த பிப்., மாதம் வரை அறுவடை அதிகமாக இருந்ததால் விற்பனைக்காக, வாழைத்தார், இலை விற்பனைக்காகஅதிகளவு கொண்டு வரப்பட்டன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக வாடிய வாழை மரங்களில், போதிய இலைகள் கிடைப்பதில்லை. துாத்துக்குடி, திருச்சி உள்ளிட்டவெளியூர்களில் இருந்து வரும் வாழை இலை வரத்து குறைந்து விட்டது. பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தான் வாழை இலை வரத்து உள்ளது.
நேற்று நடந்த சந்தையில், குறைந்தளவு வாழை இலை கட்டுகளே ஏலத்துக்கு வந்தது. ஒரு கட்டு வாழை இலை, 1,000 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக, 1,700 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.