/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பி வேலி சரியாக அமைக்கும்வரை குப்பை கொட்டுவதை தடுக்க முடியாது குறிச்சி குளத்தை மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

ADDED : ஆக 19, 2024 10:37 PM
போத்தனூர்:குறிச்சி குளக்கரையை ஒட்டி போடப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட கம்பி வேலியை, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி நிதியின் கீழ், பொழுதுபோக்கு தலமாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் குளத்தை சுற்றிலும் நடைபயிற்சிக்காக, தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, கம்பி வலை வேலி போடப்பட்டுள்ளது.
இவ்வேலி பல இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல், மது பிரியர்களின் திறந்தவெளி பார் ஆகவும், பழைய துணி உள்ளிட்ட கழிவை கொட்டும் இடமாகவும், குளக்கரை மாறியுள்ளது.
இதுகுறித்து நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி பணியாளர்கள் குறிப்பிட்ட இடத்திலுள்ள கழிவை மட்டும் அகற்றியுள்ளார்.
பிற இடங்களில் சுத்தம் செய்யப்படவில்லை. கரையிலுள்ள செடி, கொடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். அதுவும் செய்யவில்லை.
அதுபோல், சேதமாக்கப்பட்ட கம்பி வலை வேலியும் சீரமைக்கப்படவில்லை. குப்பை கழிவு மற்றும் சாய்ந்துள்ள மரங்களை அகற்றவும், நடவடிக்கை கிடையாது.
மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாகும். .