ADDED : ஆக 12, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கிழக்கு குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
பள்ளிக்கல்வித்துறையின் கிழக்கு குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நேற்று மற்றும் இன்று நடக்கின்றன.
ஸ்ரீ கே.கே.நாயுடு பள்ளி சார்பில் நடந்த இப்போட்டியில் 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம், தடை தாண்டு ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 1000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, இன்று மாலை நடைபெறும் தடகளப்போட்டிகள் நிறைவு விழாவில், பரிசு வழங்கப்படுகிறது.