/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலை ரோட்டில் செடிகள் ஆக்கிரமிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
நெடுஞ்சாலை ரோட்டில் செடிகள் ஆக்கிரமிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நெடுஞ்சாலை ரோட்டில் செடிகள் ஆக்கிரமிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நெடுஞ்சாலை ரோட்டில் செடிகள் ஆக்கிரமிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : பிப் 23, 2025 11:56 PM

வால்பாறை; வால்பாறை - சோலையாறு அணை ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை - பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில், வளைந்து நெளிந்து செல்லும், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மேலும் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடுகள் விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
மேலும் கொடைஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து ஏற்படாமல் தடுக்க, குவிக்கண்ணாடிகள் வைக்கபட்டுள்ளன. இதனால் சமீபகாலமாக வால்பாறை மலைப்பாதையில் வாகன விபத்துக்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன.
இந்நிலையில் ஆழியாறிலிருந்து வால்பாறை வரும் ரோட்டில் பல இடங்களில் செடிகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன.
இதே போல், வால்பாறையிலிருந்து சோலையாறுடேம் செல்லும் வழியில் மாணிக்கா, செலாளிப்பாறை, பழைய வால்பாறை, வறட்டுப்பாறை, உருளிக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டின், இருபுறமும் செடிகள் காடுபோல் முளைத்துள்ளது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: 'வால்பாறையில் பருவ மழைக்கு பின் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரத்தில் கூட யானைகள் ரோட்டை கடக்கின்றன.
மேலும் ரோட்டின் இருபுறமும் வானுயர்ந்து நிற்கும் செடிகளால், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. மேலும் வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த ரோட்டில், அகற்றப்படாமல் உள்ள செடிகளால், அடிக்கடி சாலைவிபத்துக்களும் நடக்கிறது.
வால்பாறை மலைப்பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.