/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஜி., கல்லுாரிகளுக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டி
/
இன்ஜி., கல்லுாரிகளுக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டி
ADDED : ஆக 12, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவங்கியது.
கோவை ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி முன்னாள் மாணவர்கள் மற்றும் உடற்கல்வித் துறை இணைந்து நடத்தும், நான்காவது ஆண்டு எஸ்.ஆர்.இ.சி., அலுமினி கிரிக்கெட் போட்டி, நேற்று துவங்கியது.
இப்போட்டியை, கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன் மற்றும் முன்னாள் மாணவர் அருண் துவங்கி வைத்தனர். 20 இன்ஜி., கல்லுாரி அணிகள் பங்கு பெறும் போட்டிகள், நாக் அவுட் முறையில், 18ம் தேதி வரை நடக்கிறது.
மாவட்ட அளவிலான இந்த போட்டி, வட்டமலைப்பாளையம் மறும் பச்சாப்பாளையம் ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.

