/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆங்கில பாடத் தேர்வு எளிது : பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி
/
ஆங்கில பாடத் தேர்வு எளிது : பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி
ஆங்கில பாடத் தேர்வு எளிது : பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி
ஆங்கில பாடத் தேர்வு எளிது : பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 06, 2025 11:48 PM

அன்னுார்; ஆங்கில பாடத் தேர்வு எளிதாக இருந்ததாக பிளஸ் டூ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த பத்தாம் தேதி தமிழ் பாடத்துடன் துவங்கியது.நேற்று ஆங்கில பாட தேர்வு நடந்தது.
அன்னுார் வட்டாரத்தில், அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மிக எளிதாக இருந்தது
தர்ஷனா, சொக்கம்பாளையம்:
ஆங்கிலப் பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒன்று, இரண்டு, மூன்று மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன.
அதிக மதிப்பெண் பெற முடியும். எளிதில் தேர்ச்சி பெறலாம்
திருமலை, பூலுவபாளையம்:
ஒரு மதிப்பெண் கேள்விகள் 20 கேட்கப்பட்டிருந்தன. இதில் பல கேள்விகள் கடினமாக இருந்தன. கட்டுரை எழுதும்படி கேட்கப்பட்டிருந்த கேள்வியும் கடினமாக இருந்தது. ஆனால் தேர்ச்சி பெறுவது எளிது.
தேர்ச்சி பெறுவது உறுதி
ஹரிஷ், போயனுார்:
பாடலிலிருந்து விளக்க கட்டுரை எழுதும்படியான 41ம் எண் ஏ,பி, கேள்விகள் கடினம். கட்டுரை எழுதும்படியான கேள்விகள் மட்டும்கடினமாக இருந்தன. மற்ற இரண்டு, மூன்று மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. உறுதியாக தேர்ச்சி பெற முடியும்.