தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு  போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு  போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு  போட்டி


ADDED : ஜூன் 04, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மண்டல அறிவியல் மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் தெற்கு, கோவை குளங்கள் பாதுகாப்பு ஆகியவை இணைந்து போஸ்டர் தயாரிப்பு போட்டியை நடத்துகின்றன.ஆறு  முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கான இந்த போட்டி ஜூன் 5ம் தேதி மதியம் 2 மணிக்கு கொடிசியா அருகேவுள்ள கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடக்கிறது. 

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ‘மாசுபாட்டைத் தடுத்து, இயற்கையை பாதுகாப்போம்’ என்ற தலைப்பிலும்,  ஒன்பது முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்கள்  ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை புதுமைகள்’ என்ற  தலைப்பிலும் போஸ்டர்களை தயாரிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 85239 09178 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us