ADDED : ஜூன் 11, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மண்டல அறிவியல் மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் சவுத் இணைந்து மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போஸ்டர் தயாரிப்பு போட்டியை நடத்தின.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஓ.டி.பி.டபிள்யூ. பவுண்டேஷன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்கள் போஸ்டர் தயாரிப்பு போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்தும், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புட்நோட்: மண்டல அறிவியல் மையத்தில் நடந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி.
