/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாராட்ட முடியாவிட்டாலும் குறைகூற வேண்டாமே! அமைச்சர் வேலு, வேலுமணிக்கு பதிலடி
/
பாராட்ட முடியாவிட்டாலும் குறைகூற வேண்டாமே! அமைச்சர் வேலு, வேலுமணிக்கு பதிலடி
பாராட்ட முடியாவிட்டாலும் குறைகூற வேண்டாமே! அமைச்சர் வேலு, வேலுமணிக்கு பதிலடி
பாராட்ட முடியாவிட்டாலும் குறைகூற வேண்டாமே! அமைச்சர் வேலு, வேலுமணிக்கு பதிலடி
ADDED : ஆக 13, 2024 01:06 AM

கோவை;'நீட்டித்தது இ.பி.எஸ்.,;நிறைவேற்றியது ஸ்டாலின்'என, நம் நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமைச்சர் வேலு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை உயர் மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு, 2010 ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கருத்துரு உருவாக்கப்பட்டது. பாலக்காடு, பொள்ளாச்சி சாலைகளில், அதிக போக்குவரத்து செறிவு இருந்ததாலும் உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், இத்திட்டத்தை செயல்படுத்த அப்போதைய முதல்வர் கருணாநிதி நடவடிக்கை மேற்கொண்டார்.
2011ம் ஆண்டு நவ.,14 அன்று, கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை தாமதப்படுத்தி, 2018 ஏப்.,2ல் பாலத்துக்கான பணிகள் துவங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. பத்தாண்டு தாமதத்துக்கு பின், 2021 ஜன.,24 அன்று உயர்மட்ட பாலத்தினை நீட்டித்து மீண்டும் பணி துவங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
2021 மே 7ல், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 12 சதவீத பாலப்பணிகள் முடிந்திருந்தன. பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பால கட்டுமானப்பணிகள் நடைபெறும் பகுதியில், நான் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு சிறப்பு கூட்டங்களை நடத்தி, பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைவுபடுத்த அறிவுரை வழங்கினேன். 88 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. இப்பாலத்துக்கு தி.மு.க., அரசு, ரூ.318 கோடி நிதி ஒதுக்கியது. முதல்வர் திறந்து வைத்தார்.
இது பற்றி 'தினமலர்' நாளிதழில், 'நீட்டித்தது இ.பி.எஸ்.,; நிறைவேற்றியது ஸ்டாலின்' என செய்தி வெளியானதை பொறுத்துக்கொள்ள முடியாத, முன்னாள் அமைச்சர் வேலுமணி, உண்மைக்கு புறம்பான செய்திகளை பேட்டியாக அளித்துள்ளார். தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்டுள்ள பணிகளை பாராட்ட மனமில்லாவிட்டாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.
இவ்வாறு, அமைச்சர் வேலு கூறியுள்ளார்.

