/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏஐ., வந்தாலும் கிராபிக்ஸ் வந்தாலும் துாரிகை ஓவியம் பக்கத்தில் நிற்க முடியாது'

ADDED : மார் 08, 2025 11:40 PM

கோவை பீளமேட்டில் உள்ள, கஸ்துாரி சீனிவாசன் ஓவிய கலைக்கூடத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் ஓவியக் கல்லுாரி மாணவிகளின் கை வண்ணத்தில் உருவான ஓவிய கண்காட்சி நடந்து வருகிறது.
ஓவியக்கல்லுாரி மாணவிகள் தேவிப்பிரியா, அனுபமா, மகாலட்சுமி, லதா தனபிரபா, மிதலா, ஆகியோரின், 60க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஓவியர் லதா தனபிரலா, ''ஒரு ஓவியத்தில் அழகும், வசீகரமும் மட்டும் வெளிப்படுவதில்லை. ஒவ்வொரு கோடுகளும், வண்ணங்களும் பல அர்த்தங்களை பிரதிபலிக்கின்றன. இன்றைக்கு ஓவியம் மற்றும் அது சார்ந்த கலைத்துறைகளுக்கு சவால் விடும் வகையில், கிராபிக்ஸ் மற்றும் 'ஏஐ' தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனால், துாரிகையால் வரையும் ஓவியத்தில் பொதிந்திருக்கும் அர்த்தங்களையும் குறியீடுகளையும் வெளிப்படுத்த முடியாது,'' என்றார்.
ஓவியர் மகாலட்சுமி, ''நான் மிக்சர் மீடியாவை பயன்படுத்தி, ஒவியங்கள் வரைவேன். பெரும்பாலும் இயற்கையை மையமாக வைத்து அதிகம் வரைவேன். உடனே புரியாது. அழகியல் உணர்வு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்,'' என்றார்.
காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஓவியப் பிரியர்கள் ஒரு விசிட் அடித்து பாராட்டலாம்.