ADDED : ஆக 18, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
கரும்புக்கடை: குனியமுத்தூரிலுள்ள திருமண மண்டபத்தில், எஸ்.டி.பி.ஐ.. தலைவர்கள் கூட்டம் நடந்தது.
இதில், கோவையில் மூலப்பொருட்கள் வங்கி மற்றும் விலை கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும். சிறு தொழில்களை பாதுகாக்க வட்டி மானியம், ஜி.எஸ்.டி. சீரமைப்பு, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும், கோவை, திருப்பூர் தொழில் மண்டலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். போதை பொருள் புழக்கம் தடுப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் தேசிய தலைவர் பைஜி, மாநில தலைவர் முபாரக் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
