/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இஸ்கான்' எஸ்.பி.ஐ., அரங்கில் கடன் திட்டங்கள் விளக்கம்
/
'இஸ்கான்' எஸ்.பி.ஐ., அரங்கில் கடன் திட்டங்கள் விளக்கம்
'இஸ்கான்' எஸ்.பி.ஐ., அரங்கில் கடன் திட்டங்கள் விளக்கம்
'இஸ்கான்' எஸ்.பி.ஐ., அரங்கில் கடன் திட்டங்கள் விளக்கம்
ADDED : ஆக 25, 2024 10:27 PM
கோவை:கோவை கொடிசியா அருகே, இஸ்கான் ஸ்ரீ ஜெகநாத் மந்திர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
இதில், கோவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சார்பில், சிறப்பு கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஆண்டுக்கு 7.25 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு, 7.75 சதவீதம் வட்டி தரும் 444 நாட்கள் கொண்ட, அமிர்த விருஷ்டி வைப்பு திட்டம், 90 சதவீதம் வரை கார் கடன், விரைவான வீட்டுக்கடன், எக்ஸ்பிரஸ் கிரெடிட், உடனடி தனிநபர் கடன், ரூ.1.5 கோடி வரை கல்விக் கடன், குறைந்த வட்டியில் நகைக்கடன், பென்ஷன் கடன் உள்ளிட்ட, பல்வேறு கடன் திட்டங்கள் விளக்கப்படுகின்றன.
கண்காட்சியில், டெபாசிட் திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல சேவைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது.
இந்த அரங்கை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோவை பிராந்திய அலுவலக தெற்கு பிராந்திய மேலாளர் சீதாராமன் பார்வையிட்டார்.