ADDED : ஜூலை 26, 2026 02:10 PM
வால்பாறை: வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் சார்பில், பொதுமக்கள், க்யூ.ஆர்., கோடு வாயிலாக, எளிதில் புகார் அளிக்க வசதியாக மக்கள் கூடும் இடங்களில் போலீசார் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் வால்பாறை நகர், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லுாரி மற்றும் எஸ்டேட் பகுதியில், ஸ்டிக்கர் ஒட்டினர்.
போலீசார் கூறுகையில், ‘பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் க்யூ.ஆர்.கோடு உடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க மொபைல் போனில் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்வதால், உடனடியாக காவல்துறை துறைக்கு தகவல் கிடைக்கும்.
குறிப்பாக, பெண்கள் தங்களுக்கு பொது இடங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை உடனடியாக புகார் தெரிவிக்கலாம்,’ என்றனர்.
