/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறிகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
காய்கறிகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 10, 2024 02:23 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து சராசரியாக உள்ள நிலையில், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மார்க்கெட்டில், தக்காளி 15கிலோ பெட்டி - 320, தேங்காய் ஒன்று - 16, கத்தரிக்காய் கிலோ - 33, முருங்கைக்காய் - 22, வெண்டைக்காய் - 20, முள்ளங்கி - 25, வெள்ளரிக்காய் - 20, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 15, பாகற்காய் - 25, புடலை - 20, சுரைக்காய் - 20, பீர்க்கங்காய் - 25, பீட்ரூட் -- 20, அவரைக்காய் - 60, பச்சை மிளகாய் - 35 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த வாரத்தை விட, தக்காளி 15 கிலோ பெட்டி - 120, வெண்டைக்காய் - 2, வெள்ளரிகாய், முள்ளங்கி, பூசணிக்காய், புடலை - 5, பாகற்காய், அவரைக்காய், பச்சைமிளகாய், கத்தரிக்காய் - 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. மேலும், முருங்கைக்காய் - 13, சுரைக்காய் - 2 ரூபாய் விலை குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை விட, தற்போது காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி 15 கிலோ பெட்டிக்கு, 100 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாதங்களில் காய்கறிகள் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.