/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்திர பதிவு நிறுத்தம் விளக்கம் கேட்ட விவசாயிகள்
/
பத்திர பதிவு நிறுத்தம் விளக்கம் கேட்ட விவசாயிகள்
ADDED : ஆக 29, 2024 02:35 AM
அன்னுார்: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் தொழில்பேட்டை அமைப்பதாக அறிவித்தது.
விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து கம்பெனி நிலத்தில் மட்டும் தொழில்பேட்டை அமைக்கப்படும்,' என்றனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக அன்னுார், புளியம்பட்டி மற்றும் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட ஆறு ஊராட்சிகளை சேர்ந்த நிலங்களை பத்திர பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால் தலைமையில், நேற்று அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளர் செல்வ பாலமுருகனிடம், இந்த ஆறு ஊராட்சிகளில் பத்திரப்பதிவு செய்யாதது ஏன், அதற்கு அரசு உத்தரவு உள்ளதா, எங்களுக்கு விளக்கம் தேவை,' என்றனர். 'இதற்கு இரண்டு நாட்களில் அரசிடம் இருந்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கிறோம். தற்போது பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,' என்றார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.