/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் கோஷம்; வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் சோகம் விளைநிலங்களில் பெட்ரோல் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு

ADDED : ஆக 29, 2024 10:27 PM

சூலுார்: விவசாய நிலங்களில் பெட்ரோல் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
பாரத் பெட்ரோலியம் சார்பில் சூலுார் அடுத்த இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் வரை குழாய்கள் வழியே பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இருகூரில் இருந்து முத்தூர் வரை, 74 கி.மீ., தூரத்துக்கு விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கும் பணியில் இறங்கியது. இதற்கு, விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பணியை தடுத்து நிறுத்தியும், ஆயில் நிறுவனத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதனால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், சூலுார் தாலுகா அலுவலகத்தில், கோவை தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார் தலைமையில் நேற்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. துணை கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, தாசில்தார் தனசேகர் பங்கேற்றனர்.
'எங்களுக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல், எங்கள் நிலங்களில் பெட்ரோல் குழாய்கள் பதிக்க எப்படி முடிவு செய்தீர்கள். குழாய்கள் பதிக்க அனுமதிக்க மாட்டோம்.
ஏற்கனவே, 20 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும், நெடுஞ்சாலை ஓரமாக குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுங்கள், என, விவசாயிகள் தங்கள் தரப்பு கருத்துக்களை ஆவேசத்துடன் கூறினர்.
ஆர்.டி.ஓ., பேசுகையில், இந்த திட்டத்தை செயல்படுத்த உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும், என்றார்.
திட்டத்தை நிறைவேற்ற அரசு உறுதியாக உள்ளது என, அவர் கூறியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
உங்கள் கருத்துகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம், என்று கூறி அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்தினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன், ஈஸ்வரமூர்த்தி, மயில்சாமி, ரவிக்குமார், சுலேச்சனா, சரோஜினி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.