/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
/
நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 06, 2024 02:15 AM
உடுமலை;நீர் நிலைகளை துார்வாரி கூடுதல் நீர் சேமிக்கும் வகையிலும், விளை நிலங்களை வளமாக்கும் வகையில் விவசாயிகள் வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், மண் பாண்ட தொழிலாளர்களும் தங்களுக்கு தேவையான மண் எடுத்துக்கொள்ளலாம்.
நீர் நிலைகள் குறித்த விபரங்களை, www.tiruppur.nic.in என்ற இணைய தளம் வாயிலாகவும், https://tnesevai.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இ - சேவை மையங்களில், ஆன்லைன் வாயிலாக, உரிய ஆவணங்கள் பதிவேற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு, தாலுகா அலுவலகங்கள் வழியாக அனுமதியளிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட நீர் வளத்துறை, உள்ளாட்சி துறை சார்பில் கண்காணிக்கப்படுகிறது.
ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு, 75 கன மீட்டரும், புன் செய் நிலத்திற்கு, 90 கன மீட்டரும் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.
உடுமலை தாலுகாவில், நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமூர்த்தி அணையில், மண் எடுத்துக்கொள்ள, 4 சர்வே எண்களில், 98 ஆயிரத்து, 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.
அதே போல், பெரியகுளத்தில், இரு சர்வே எண்களில், 30 ஆயிரம் கன மீட்டரும், கரிசல் குளம், தினைக்குளத்தில், தலா, 15 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ளலாம்.
ஊரக வளச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகளிலும் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், உடுமலை ஒன்றியத்தில், ஆண்டியகவுண்டனுார் பெரிசனம்பட்டி குளம், பூலாங்கிணர் குளம், பெரியவாளவாடி சப்டியார் குளம் ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
உடுமலை தாலுகா, குடிமங்கலம் ஒன்றித்தில், ஆமந்தகடவு அம்மாபேட்டை குளம், செங்குளம், குடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கு பகுதி குளம், ஆத்துக்கிணத்துப்பட்டி, ஏ.டி., காலனி பொது குளம் மற்றும் குட்டை, கொங்கல் நகரம் வடக்கு பகுதி குளம், பண்ணைக்கிணறு, தெற்கு பகுதி குளம், சோமவாரபட்டி- பொட்டிநாயக்கனுார் குளம், வீதம்பட்டி குளத்து விநாயகர் கோவில் குளம், விருகல்பட்டி புதுார் மற்றும் மரிக்கந்தை குளங்களில் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் தாலுகாவில், ராமேகவுண்டன் புதுார் மெட்ராத்தி குளம், அரண்மனை குளம், பணத்தம்பட்டி ஈரச வள்ளி குளம், வேடபட்டி அரண்மனை குளம் ஆகிய குளங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.