/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நஷ்டத்தை தவிர்க்க பல பயிர் விவசாயிகள் சாகுபடி
/
நஷ்டத்தை தவிர்க்க பல பயிர் விவசாயிகள் சாகுபடி
ADDED : ஆக 27, 2024 02:25 AM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, மன்றாம்பாளையத்தில் உள்ள விவசாயிகள் நஷ்டத்தை தவிர்க்க பல பயிர் செய்து வருகிறனர்.
கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதிகள் அதிகம் உள்ளது. இதில், பெரும்பாலான விவசாயிகள் தென்னை மற்றும் தக்காளி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், வடசித்துார், மன்றாம்பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பலர் நஷ்டத்தை தவிர்க்க பல பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
மன்றாம்பாளையத்தில் உள்ள விவசாயி ஒருவர் தனது நிலத்தில், 45 சென்ட் இடத்தில், 20 சென்ட் தக்காளி, 20 சென்ட் மிளகாய் மற்றும் 5 சென்ட் சின்ன வெங்காயம் என பயிரிட்டுள்ளார்.
விவசாயி கூறியதாவது: தக்காளி பறிப்பு துவங்கியுள்ளது. இதில், தற்போது வரை, 250 பெட்டிகள் (15 கிலோ) பறித்துள்ளோம். இன்னும், 1,100 பெட்டிகள் வரை விளைச்சல் இருக்கும்.
இதே போன்று மிளகாயில் தற்போது வரை, 50 கிலோ கிடைத்துள்ளது. இன்னும் மூன்று முதல் நான்கு மாதம் வரை மிளகாய் விளைச்சல் இருக்கும். வாரம் ஒரு முறை மிளகாய் பறிக்கிறோம். இந்த பயிர்களுக்கு ஆரம்ப காலத்தில் கோழி எரு உரமாக அளித்தோம். தற்போது ரசாயன உரம் அளித்து வருகிறோம்.
இங்கு மிளகாய் மற்றும் தக்காளி பறிக்க ஆட்கள் நியமிக்கப்படுவது இல்லை. மொத்தமே 40 சென்ட் இடம் என்பதால் நாங்களே பறிக்கிறோம். தற்போது வரை இதற்கு, 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். மீதம் உள்ள 5 சென்ட் நிலத்தில் சொந்த தேவைக்காக சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளோம்.
இவ்வாறு, கூறினார்.