/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அட்மா திட்டம் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
/
அட்மா திட்டம் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 05, 2024 12:05 AM
கருமத்தம்பட்டி : முடங்கி கிடக்கும் அட்மா திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சதாசிவம் சிவசாமி, கலெக்டருக்கு அனுப்பிய மனு விபரம்:
வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு கொண்டு செல்வது அட்மா திட்டமாகும். கடந்த, 2005-06 இல் துவங்கப்பட்ட இத்திட்டம், வட்டார வாரியாக செயல்பட்டதால், விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இத்திட்டம் முடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டங்களும் கூட்டப்படவில்லை.
வட்டார ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கும், உழவர் நண்பர்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. எனவே, குறைகளை களைந்து, அட்மா திட்டத்தை வட்டாரம் வாரியாக முறையாக செயல்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.